எமது சபையுடன் “Drive Green” புகைப்பாிசோதனை நிலைய அலுவலர்கள் இணைந்து வெண்புரவி கடற்கரையோரங்களை தூய்மைப்படுத்தும் சமூக பணி-05.03.2025

வேலணை பிரதேச சபையும் “Drive Green” புகைபாிசோதனை நிலைய அலுவலர்களும் இணைந்து அரசாங்கத்தின் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தை கருப்பொருளாகக் கொண்டு எமது சபைக்குட்பட்ட அல்லைப்பிட்டி வெண்புரவி கடற்கரையோரங்களை தூய்மைப்படுத்தும் சமூக பணி 05.03.2025 அன்று நடைபெற்றது. 

2025 ஆம் ஆண்டுக்கான கேள்வி அறிவித்தல் – 07.11.2025

வேலணை பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட மீன் சந்தை, மரக்கறிச்சந்தைகள், இறைச்சிக்கடைகள், சிற்றூண்டிச்சாலைகள், கடைகள் வாகனத் தாிப்பிடங்களும் மலசலகூடமும் உள்ளடங்கலான சுற்றுலாமையம் (படகு சேவைகள் தவிர்த்து) என்பனவற்றை 01.01.2025 தொடக்கம் 31.12.2025 வரை குத்தகைக்கு வழங்குவதற்கான கேள்விகள் சபையால் கோரப்படுகின்றன.

 

பொது அறிவித்தல் -2025 ஆம் ஆண்டுக்கான பாதீடுக்கான முன்மொழிவு கோரல் -02.102024

எமது சபையின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் வேலணை பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து கோரப்படுகின்றது.

குறிப்பாக பெண்கள், இளையோர், விசேட தேவையுடையோர் மற்றும் பாதிக்கப்பட்ட குழுக்களிடமிருந்து முன்மொழிவுகள் கருத்துக்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆர்வமுடையோர் எதிர்வரும் 14.10.2024 ஆம் திகதிக்கு முன்னர் பினவரும் வழிகளினூடாக எமக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

தபால் முகவாி  செயலாளர், வேலணை பிரதேச சபை.

மின்னஞ்சல் : velanaips@gmail.com

தொலைபேசி இல :021 2210180 / 021 2211506

இணையத்தளம் :www.velanai.ps.gov.lk

தி.தியாகச்சந்திரன்,

செயலாளர்,

வேலணை பிரதேச சபை