சாவகச்சோி பிரதேச சபையின் 2024 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மாத நிகழ்வில் வேலணை பிரதேச சபையும் பங்கேட்பு -13.08.2024

2024 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மாத நிகழ்வினை முன்னிட்டு 13.08.2024 அன்று சாவகச்சேரி பிரதேச சபையினால் நாவற்குழி நெய்தல் கடற்கரையில் ஆண், பெண் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான தாழிழுவைப் போட்டி (கயிறிழுத்தல்) மற்றும் கிளித்தட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டிருந்ததுடன் நாவற்குழி உப அலுவலகத்தில் சதுரங்க போட்டிகளும் நடாத்தப்பட்டிருந்தன.
இவற்றில் வேலணை பிரதேச சபையானது சதுரங்க போட்டியில் முதலிடத்தையும் பெண்களுக்கான கிளித்தட்டு போட்டியில் முதலிடத்தையும் ஆண்களுக்கான கயிறிழுத்தல் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.