2024 ம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு அல்லைப்பிட்டி பொது நூலகத்தினால் நடாத்தப்பட்ட புத்தகக் கண்காட்சி -10.09.2024

2024 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வேலணை பிரதேச சபையின் உப அலுவலக அல்லைப்பிட்டி  பொது நூலகத்தினால் கடந்த 10.09.2024 அன்று அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் மற்றும் அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்திலும் புத்தகக் கண்காட்சி நடைப்பெற்றது.

”உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே ” என்ற தொனிப்பொருளில் மாணவர்களுக்கு விழிப்புட்டும் வகையில் இக்கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் மாணவர்கள், ஆசிாியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.