2024 ம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வேலணை பிரதேச சபையின் அல்லைப்பிட்டி பொது நூலகத்தினால் 04.09.2024 அன்று புங்குடுதீவு உப அலுவலக நூலகத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. அத்தோடு முன்பள்ளி மாணவர்களிடையே நடாத்தப்பட்ட வர்ணம் தீட்டல், விநோத உடைப்போட்டி மற்றும் கற்பனை கதை கூறல் போன்ற போட்டிகளும் நடைபெற்றது.
இப்போட்டிகளுக்கு வேலணை பிரதேச சபையின் தலைமை அலுவலக உத்தியோகத்தர்கள் நடுவர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் புங்குடுதீவு உப அலுவலக பொறுப்பதிகாாி, முன்பள்ளி ஆசிரியர்கள்,நூலகர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விருப்பிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.