1. கட்டிட திட்டமிடல் வரைபடங்களை அனுமதித்தல்.

கட்டட திட்டமிடல் வரைபடங்களை அனுமதித்தல்

  • நகரமயமாகி வருகின்ற மற்றும் எதிர்காலத்தில் நகரமயமாவதற்கு வாய்ப்புள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் பிரேரிக்கப்படுகின்ற பிரதேசத்திற்குள் உள்ள ஏதேனும் ஒரு காணியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பகுதிகளாகப் பிரிக்கும்போது அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காணித்துண்டுகளை ஒருங்கிணைக்கும்போது, சுகாதாரத்திற்கு மற்றும் சூழலுக்கு ஏற்படுகின்ற தாக்கத்தைக் குறைப்பதற்குத் தேவையான ஒழுங்கமைக்கும் அதிகாரம், நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் உள்ளுராட்சி மன்றங்களிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், ஏதேனும் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரப் பிரதேசத்திற்குள், அபிவிருத்தியடைந்த பிரதேசங்கள் என்ற ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்திற்குள் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து காணி துண்டு பிரிப்புகளும், காணி ஒருங்கிணைப்பு செயற்பாடுகளுக்காகவும் உள்ளுராட்சி மன்றங்களின் அனுமதி பெறப்படுதல் வேண்டும். 
  • சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள்
1. கட்டிட வரைபடம்- மூலப் பிரதிகள் -3
2. நடப்பு ஆண்டிற்கான மதிப்பீட்டு வரி செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டு - பிரதி 1.
3. நில உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை - புகைப்பட பிரதி 1
4. 30 ஆண்டுகளுக்கான வரலாற்றுத் தாள்கள்- புகைப்படப் பிரதிகள் 1, அசல் பிரதி சரிபார்ப்புக்கு கிடைக்க வேண்டும்
5. நில அளவைப்படம் - புகைப்பட பிரதி 3, ஆனால் அசல் பிரதி ஆரம்ப சரிபார்ப்புக்கு கிடைக்க வேண்டும்
6. சட்ட ரீதியான காணி ஆவணம் ( உறுதிப்படுத்தப்பட்டது) புகைப்பட பிரதிகள் 3, அசல் பிரதி சரிபார்ப்புக்கு கிடைக்க வேண்டும்.
7. உபபிரிவிடல் -பிரதி 1 (தேவை ஏற்படின்).
8. காணி 6 பேர்ச்களுக்கு குறைவாக இருந்தால் நகர அபிவிருத்தி அதிகாரசபை அனுமதி பெற வேண்டும் புகைப்பட பிரதிகள் 3
9. வதிவிடம் அல்லாத கட்டடம் எனின் 400 அடிக்கு மேல் நகர அபிவிருத்தி அதிகாரசபை அனுமதி பெறப்பட வேண்டும் - புகைப்பட பிரதி
10. வதிவிடக்கட்டட நிர்மாணம் எனின் 1000 அடி பரப்பளவு அல்லது 15 உயரத்திற்கு அதிகமாக இருப்பின் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி பெறப்படவேண்டும்.
11. நிலம் அரசுக்கு சொந்தமானதாக இருந்தால், பிரதேச செயலகத்திலிருந்து குத்தகை ஒப்பந்தம் பெறப்பட வேண்டும்.
12. தனியார் அல்லாத நிலத்தில் கட்டிட அனுமதி வழங்கப்பட வேண்டுமானால், பிரதேசசெயலக அனுமதி தேவை (விடயத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தரிடமிருந்து விண்ணப்படிவத்துடன் சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்களின் பட்டியலை பெற்றுக்கொள்ளவும்).

 

 

  • கால எல்லை  - 21 நாட்கள்
  •  கட்டணம்
  1. விண்ணப்பப்பத்திர கட்டணம்; ரூ. 500.00
  2. செயன்முறைக் கட்டணம் : விஸ்தீரணம், கட்டிடத்தின் தன்மையின் பிரகாரம் தீர்மானிக்கப்படும்.
பொறுப்பான உத்தியோகத்தர்கள்
  1. முன் அலுவலக உத்தியோகத்தர் ☎️021 221 0180
  2. தொழிநுட்ப உத்தியோகத்தர்; ☎️021 221 1506
  3. விடயத்துக்குப் பொறுப்பான உத்தியோகத்தர் ☎️ 021 221 0180 ☎️021 221 1506