01.12.2024 ஆம் திகதி வலம்புாி பத்திாிகையில் பிரசுரிக்கப்பட்ட விளம்பரத்தின் இலக்கம் 02 ஆம் பகுதிக்கு மேலதிகமானது,
2025 ஆம் ஆண்டு வேலணை பிரதேச சபையில் கட்டட அனுமதிக்கான கட்டட வரைபடங்களை வரைய விரும்பும் படவரைஞர்கள் மற்றும் பதிவுகளை புதுப்பிக்க விரும்புவோர் கீழ்வரும் விடயங்களை கருத்தில் கொண்டு உாிய ஆவணங்களுடன் 14.02.2025 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
- வேலணை பிரதேச சபையின் கீழ் தகைமை பெற்று கட்டட படவரைஞராக இறுதி 02 வருடங்கள் தொடர்ச்சியாக செயற்படுபவர்கள் தமது பதிவினை புதுப்பிக்கமுடியும்.
- அத்துடன் NVQ- Level 05 in Drafting Technology (building) கற்கைநெறியினை பயின்று வருபவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
- புதிய பதிவுகளை மேற்கொள்ள விரும்புவோர் NVQ-Level 05 in Drafting Technology (building) கற்கைநெறியினை புர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
- மேற்குறித்த பதிவுகள் 2025.01.29 - 14.02.2025 ஆம் திகதி மு.ப 9.00 - பி.ப 3.00 மணிவரையில் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
செயலாளர்,
வேலணை பிரதேச சபை.
இன்று 01.01.2025 காலை 8.30 மணிக்கு சபையின் முன்றலில் சகல அரச அலுவலர்களின் பங்குபற்றுதலோடு சத்தியபிரமாணம் நிகழ்வும், அதனை தொடர்ந்து சபையின் மாநாட்டு மண்டபத்தில் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
சபையின் செயலாளர் உரையாற்றுகையில், மலர்ந்துள்ள புதுவருடத்திலே அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தைக் கருப்பொருளாகக் கொண்டு மக்களின் வாழ்க்கைதரத்தை மேம்படுத்தும் நோக்குடன் சகல செயற்பாடுகளையும் இலக்குகளையும் அடைவதற்கு எம்மை முழுமனதாக அர்ப்பணித்து அவற்றை திருப்திகரமாக நிறைவேற்றுவதற்காக எமது கடமைகளை குழுவாக செயற்பட்டு நிறைவேற்றுவோம். இலங்கையின் அபிவிருத்தி மற்றும் பொருளாதாரம் என்பனவற்றை மேலோங்கச் செய்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
அரசாங்கத்தின் புதிய எண்ணக்கருக்களான வறுமையை ஒழித்தல்,டிஐீட்டல் ஸ்ரீலங்கா, கிளீன் ஸ்ரீலங்கா ஆகியவற்றை செயற்படுத்துவோம் அத்தோடு இப்புத்தாண்டு கடந்த வருடத்தை போல ஆரோக்கியமானதாகவும் பிரகாசமாகவும் அமையட்டும்.




1987 ஆம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபையின் கட்டளைச்சட்டத்தின் 168ம் பிாிவிற்கிணங்க வேலணை பிரதேச சபையின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தயாாிக்கப்பட்டு 09.12.2024 ஆம் திகதி தொடக்கம் 16.12.2024 ஆம் திகதி வரை அலுவலக நேரத்தில் தலைமை அலுவலகம், உபஅலுவலகங்கள் மற்றும் எமது பொது நூலகங்களில் பார்வையிடலாம். அத்தோடு எமது இவ் இணையத்தளத்திலும் பார்வையிடலாம்.
கருத்துக்கள் எதுவும் இருப்பின் 16.12.2024 திகதிக்கு முன்னர் எழுத்து மூலமாக தொிவிக்க முடியும் என்பதனை இத்தால் பகிரங்கமாக அறியத் தருகின்றேன்.
வரவுசெலவுத்திட்டம் வரைபினை பார்வையிட இனை சொடுக்குக. 
தபால் முகவாி : செயலாளர், வேலணை பிரதேச சபை. மின்னஞ்சல் : velanaips@gmail.com தொலைபேசி இல 021 2210180 / 021 221 1506
திரு.தியாகச்சந்திரன்,
செயலாளர்,
வேலணை பிரதேச சபை

Our council's budget proposals for the year 2025 are requested from the public and general people of Velanai Pradeshiya Sabha.
Proposals and comments are especially sought from women, youth, persons with special needs and affected groups. Those interested are requested to send it to us through the following channels before 14.10.2024.
Postal Address : Secretary, Velanai Pradeshiya Sabha
e-mail : velanaips@gmail.com
Telephone Number :021 2210180 / 021 2211506
Website:www.velanai.ps.gov.lk
T.Thiagachandran,
Secretary,
Velanai Pradeshiya Sabha.