உரிமை மாற்றச் சான்றிதழ் வழங்குதல்

சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள்
01. விண்ணப்பதாரியின் கோரிக்கைக்கடிதம் சமர்ப்பிக்க வேண்டும்.
02. பெயர்மாற்ற விண்ணப்பம் பிரசித்த நொத்தாரிசினால் பூரணப்படுத்தப்பட்டு ஒப்பந்தத்துடன் திகதி, பதவி, இலச்சினை பொறிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
03. ஆதனத்தின் உறுதிகள்
04. விண்ணப்பதாரியின் உறுதியில் பெயர்கள் வேறுபாடு இருந்தால் சத்தியக்கடதாசியின் மூலப்பிரதியும் நிழற்பிரதியும்.
05. சொரியல்காணியாக இருப்பின் பிரிவிடுதல் உறுதி மூலம் அல்லது நீதிமன்ற அனுமதியுடனான உறுதி சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
06. குறித்த ஆவணத்திற்கான நிலஅளவைப்பட பிரதி சமர்ப்பிக்கப்படல் வேண்டும் (நில அளவைப்படத்தில் நில அளவையாளர் பெயர், பெயர், ஒப்பம், காணியின் அளவு, பாதை, இலக்கம், திகதி என்பன குறிப்பிடப்படுதல் வேண்டும்.
07. 1986ற்கு பின்னர் காணி உபபிரிவிடுகை செய்யப்பட்டிருந்தால் திட்டமிடல் பிரிவினாரால் அங்கீகரிக்கப்பட்ட நில அளவைப்படம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
08. தேவையான சந்தர்ப்பத்தில் பிறப்புச்சான்றிதழும், அடையாள அட்டையின் மூலப்பிரதியும், நிழற்பிரதியும்.
09. உரிய சொத்தின் உரிமையானது பிரிப்பு வழக்கில் கிடைக்கப்பெற்றிருந்தால், நீதிமன்ற தீர்மானத்தின் சான்றுப்படுத்தப்பட்ட இரண்டு பிரதியை உறுதி சாராம்சத்தின் பிரதிகளுடன் சமர்ப்பித்திருத்தல் வேண்டும்.
10. காணியின் சட்டரீதியான உரிமை அல்லாத பிற நபராயின் சட்டரீதியான உரிமையாளரினால் கையளிக்கப்பட்ட அட்டோர்னி அனுமதிப்பத்திரத்தின் சான்றுப்படுத்தப்பட்ட இரண்டு பிரதிகளுடன், அந்த அட்டோர்னி அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படவில்லை எனவும் அட்டோர்னி அதிகாரத்தை வழங்கிய நபர் உயிரோடு இருப்பதாக சத்தியக் கடதாசியொன்றையும் சமர்ப்பித்தல் வேண்டும்.
11. ஆறுமாதத்திற்குட்பட்ட வரலாற்றுத்தாள்

கால எல்லை

15 நாட்கள்

கட்டணம்
(தற்போது நடைமுறையில் இல்லை)

பொறுப்பான உத்தியோகத்தர்கள்
முன் அலுவலக உத்தியோகத்தர் ☎️ 021 221 0180
தொழிநுட்ப உத்தியோகத்தர் ☎️021 221 1506
விடயத்துக்குப் பொறுப்பான உத்தியோகத்தர் ☎️021 221 0180,☎️021 221 1506