வேலணை பிரதேச சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட வேலணை உபஅலுவலகத்தினால் நடாத்தப்படுகின்ற முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி நிகழ்வுகள் 09.02.2024 அன்று மதியம் 1.30 மணியளவில் சாட்டி கடற்கரையில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது பிரதேச சபையின் செயலாளா் தி.தியாகச்சந்திரன் அவா்கள் தலைமையில் பிரதம விருந்தினராக சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசுமாகிய திரு.அருட்பிரகாசம் நிரோசன் அவா்களும் சிறப்பு விருந்தினராக அன்னை கடலுணவு நிறுவன இயக்குனா் திரு.அமலதாசன் செபஸ்ரியன் றெசான் அவா்களும் மற்றும் சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் முன்பள்ளி ஆசிாியர்கள் நலன்விரும்பிகள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து சிறப்பித்திருந்தனா்.