வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் சத்துணவு மற்றும் போசாக்கு உணவுபொருட்கள் வழங்கல் நிகழ்வு-09.02.2024

வேலணை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வறுமை ஒழிப்பு எனும் தலைப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து கா்ப்பிணித் தாய்மாா்கள், வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட சிறுவா்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மக்களுக்கு சத்துணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு 09.02.2024 அன்று காலை 10.00 மணியளவில் சபையின் முன்றலில் நடைபெற்றது. 

இந்நிகழ்வானது சபையின் செயலாளர் தலைமையில் வேலணை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலர், வேலணை சுகாதார வைத்திய அதிகாாிகள் பணிமனை உத்தியோகத்தர்கள், பயனாளிகள், சமூக நலன்விரும்பிகள் மற்றும் சபையின்  உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.