வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின் உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி திணைக்களம், வடக்கு மாகாணம் அவர்களின் ஆலோசனையில் சர்வதேச பூச்சிய கழிவு தினத்தினை முன்னிட்டு சாட்டி சுற்றுலா கடற்கரையினை தூய்மைப்படுத்தும் நிகழ்வு இன்று 22.03.2024 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 09.00 மணிக்கு நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வேலணை சுகாதார வைத்திய அதிகாரி அ.ஜெயக்குமார் அவர்களும் சிறப்பு விருந்தினராக வேலணை பிரதேச சபை செயலாளர் திரு.தி.தியாகச்சந்திரன் அவர்களும் கலந்து கொண்டதோடு பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மத தலைவர்கள். பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
குறித்த பிரதேசத்தில் ஒலிபெருக்கி மூலம் கழிவுகளை தரம்பிரித்து வழங்குவது தொடர்பான அறிவித்தல்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் அனைத்த கழிவுகளும் நிகழ்வின் பங்குபற்றியவர்களினால் தரம்பிரிக்கப்பட்டு சேகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.