வேலணை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மாதத்தினை முன்னிட்டு உள்ளூராட்சி சபைகளுக்கிடையில்ஆண், பெண் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியானது 15.05.2024 அன்று சாட்டி கடற்கரையில் நடைபெற்றதுடன் ஆண் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியானது வரலாற்றில் முதன் முறையாக கடலினுள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
பெண் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான கயிறு இழுத்தல் இறுதிப் போட்டியானது சாவகச்சேரி பிரதேச சபைக்கும் யாழ் மாநகர சபைக்கும் நடைபெற்றதுடன் அப்போட்டியில் சாவகச்சேரி பிரதேச சபை அணி வெற்றி பெற்றதுடன் ஆண் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான கயிறு இழுத்தல் இறுதிப் போட்டியானது யாழ் மாநகர சபைக்கும் வல்வெட்டிதுறை நகர சபைக்கும் நடைபெற்றதுடன் அப்போட்டியில் வல்வெட்டித்துறை நகர சபை அணி வெற்றி ஈட்டியமையும் குறிப்பிடத்தக்கது.
















