உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு யாழ் கியூடெக் (Caritas – Hudec) அமைப்புடன் இணைந்து வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சாட்டி கடற்கரையினை துப்புரவாக்கும் நிகழ்வு மற்றும் மரநடுகை நிகழ்வானது இன்று (05.06.2024) இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் அனைத்து மத தலைவர்கள், கியூடெக் அமைப்பின் உத்தியோகத்தர்கள், வேலணை பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பனிமணை உத்தியோகத்தர்கள், மாவட்ட சுற்றுச்சூழல் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.