புதுவருடத்தில் அரச சேவை சத்திய பிரமாணம் செய்தலும், கடமைகளை ஆரம்பித்தலும் 01.01.2025

இன்று 01.01.2025 காலை 8.30 மணிக்கு சபையின் முன்றலில் சகல அரச அலுவலர்களின் பங்குபற்றுதலோடு சத்தியபிரமாணம் நிகழ்வும், அதனை தொடர்ந்து சபையின் மாநாட்டு மண்டபத்தில் கலந்துரையாடலும் இடம்பெற்றது.

சபையின் செயலாளர் உரையாற்றுகையில், மலர்ந்துள்ள புதுவருடத்திலே அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தைக் கருப்பொருளாகக் கொண்டு மக்களின் வாழ்க்கைதரத்தை மேம்படுத்தும் நோக்குடன் சகல செயற்பாடுகளையும் இலக்குகளையும் அடைவதற்கு எம்மை முழுமனதாக அர்ப்பணித்து அவற்றை திருப்திகரமாக நிறைவேற்றுவதற்காக எமது கடமைகளை குழுவாக செயற்பட்டு நிறைவேற்றுவோம். இலங்கையின் அபிவிருத்தி மற்றும் பொருளாதாரம் என்பனவற்றை மேலோங்கச் செய்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

அரசாங்கத்தின் புதிய எண்ணக்கருக்களான வறுமையை ஒழித்தல்,டிஐீட்டல் ஸ்ரீலங்கா,  கிளீன் ஸ்ரீலங்கா ஆகியவற்றை செயற்படுத்துவோம் அத்தோடு இப்புத்தாண்டு கடந்த வருடத்தை போல ஆரோக்கியமானதாகவும் பிரகாசமாகவும் அமையட்டும்.