01.12.2024 ஆம் திகதி வலம்புாி பத்திாிகையில் பிரசுரிக்கப்பட்ட விளம்பரத்தின் இலக்கம் 02 ஆம் பகுதிக்கு மேலதிகமானது,
2025 ஆம் ஆண்டு வேலணை பிரதேச சபையில் கட்டட அனுமதிக்கான கட்டட வரைபடங்களை வரைய விரும்பும் படவரைஞர்கள் மற்றும் பதிவுகளை புதுப்பிக்க விரும்புவோர் கீழ்வரும் விடயங்களை கருத்தில் கொண்டு உாிய ஆவணங்களுடன் 14.02.2025 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
- வேலணை பிரதேச சபையின் கீழ் தகைமை பெற்று கட்டட படவரைஞராக இறுதி 02 வருடங்கள் தொடர்ச்சியாக செயற்படுபவர்கள் தமது பதிவினை புதுப்பிக்கமுடியும்.
- அத்துடன் NVQ- Level 05 in Drafting Technology (building) கற்கைநெறியினை பயின்று வருபவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
- புதிய பதிவுகளை மேற்கொள்ள விரும்புவோர் NVQ-Level 05 in Drafting Technology (building) கற்கைநெறியினை புர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
- மேற்குறித்த பதிவுகள் 2025.01.29 – 14.02.2025 ஆம் திகதி மு.ப 9.00 – பி.ப 3.00 மணிவரையில் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
செயலாளர்,
வேலணை பிரதேச சபை.